அறிமுகம் : இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ)
ஓம் குரு வாழ்க! ஓம் குருவே போற்றி! ஓம் குருவே துணை! ஓம் குருவே எல்லாம்! ஓம் குருவே சரணம்!
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி
குருதேவர் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அரசயோகி கருவூறார்
காலவேகங்களாலும் கருத்து மாற்றங்களாலும் மானுட இனப் போரட்டங்களாலும்,.. மெய்யான இந்துமதத்தின் ஏட்டறிவிலும் பட்டறிவிலும் ஏற்பட்டு விடக்கூடிய தேய்நிலைகளையும், நோய்நிலைகளையும், பேய்நிலைகளையும் ஆய்வுசெய்து அகற்றி மெய்யான இந்து மதத்தைத் தூய்மையும், வாய்மையும், துய்ப்பு நிலையும் பெறுமாறு செய்வதற்காகத் தோன்றுபவர்களே பதினெண்சித்தர் பீடாதிபதிகள்.
இவர்கள், தெய்வீகக் கல்வி, கடவுட் கல்வி, அருட்கலைக் கல்வி,..எனப்படும் பலவகையான கல்விகளைக் கற்றுத் தேர்ந்து முதிர்ந்து நூற்றெட்டு அருட்பட்டங்களைப் பெற்றாகவேண்டும்.
குருதேவர் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அரசயோகி கருவூறார்
இதன்படி அயராது முயன்று, அந்தணர் அண்ணல், அருளாட்சிநாயகம், இந்துமதத்தந்தை, ஞானத்தந்தை, ஞானாச்சாரியார், குவலய குருபீடம், பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி இராசிவட்ட நிறைவுடையார்,.. என்று 108-க்கும் மேற்பட்ட அருட்பட்டங்களைப் பெற்றவரே எங்கள் குருதேவர்.இவர் கருவிலேயே பெற்ற திருவுடன் இலைமறைக் காயாகவே செயல்பட்டுவந்தார். பேரருள்மிகு குருதேவர் அவர்கள் சாதி, இன, மொழி, நாட்டு வேறுபாடுகளோ வெறிகளோ இல்லாமல்; 'உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டையும்', 'உலக சமத்துவச் சகோதரத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவு சமுதாயத்தையும்' உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.
குருதேவர் அவர்களின் தலைமையின் கீழ்
- அவர்களால் துவக்கப்பட்ட பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ.) உலகெங்கும் தத்துவம் மற்றும் சமயம் சார்ந்த அருளாட்சிப் பணிகளைச் செய்து வருகின்றது
- 'மதம் ஒரு சமூகம் விஞ்ஞானம்' ,'மதமே மனிதப் பண்பைப் பாதுகாத்து பயிர்செய்யக் கூடியது', ‘மதமே கலைகளுக்கும் அறிவியல்களுக்கும் தாய்'. ‘மதமே தனிமனித, குடும்ப, சமுதாய அமைதியையும், நிறைவையும், நிம்மதியையும், சமாதானத்தையும் விளவிக்கும் ஆற்றலுடையது', என்ற சித்தர் நெறி தத்துவத்தை உலகெங்கும் உள்ள மக்கள் புரிந்திடும் பணியை இ. ம .இ. செய்து வருகின்றது
- ‘மதமே மனித வாழ்வுக்குரிய பொருளை வழங்குவது', ‘மதமே மனிதவாழ்வின் வேக தாக மோக வெறிகளை நெறிப்படுத்தும் ஆற்றலுடையது' .. என்ற குருதேவர் அவர்கள் அருளிய கருத்து விளக்க வாசகங்களை அனைவருக்கும் வழங்கி உலக மத மறுமலர்ச்சிக்காக பாடுபடுவதே எங்களது கோட்பாடு.
- மேலும், உலக மதங்கள் அனைத்துக்கும் மூலமாக தாயாக உள்ள மெய்யான இந்துமதம் என்கின்ற சித்தர்நெறியின் மறுமலர்ச்சிக்காக அனைவருக்கும் அழைப்பு விடுத்து சமய சமுதாய மறுமலர்ச்சிக்காக இ.ம.இ செயல்பட்டு வருகின்றது.
பகுத்தறிவுவாதம், நாத்திகவாதம் என்ற பெயர்களில் மதச் சீரழிவுகளும், சிதைவுகளும் விரோதங்களும், துரோகங்களும்... இந்துமதத்தில் மட்டும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.
மேலும் நமது இந்துக்களே, இந்துமதம் இங்கே! இந்துவேதம் எங்கே? இந்துவேதம் என்றால் என்ன? இந்துவேதம் யாரால் அருளப்பட்டது? எப்பொழுது அருளப்பட்டது? யாருக்காக அருளப்பட்டது? இந்துவேதம் எந்த மொழியில் அருளப்பட்டது? எந்த நாட்டில் அருளப்பட்டது? அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் என்ன? அதன் பயன் என்ன? என்று கேள்வி எழுப்பி கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது..
இந்துக்களுக்கும், இந்துக்களாக உள்ள இந்தியர்களுக்கும், இந்தியர்களாக உள்ள இந்துக்களுக்கும் இந்தியர்களுக்கும் மெய்யான இந்து வேதத்தை தெரியவைத்து, புரியவைத்து உணர வைத்து, ஏற்று ஓப்புக்கொள்ள வைத்து... அதன்மூலம் இந்துவேத வளர்ச்சிக்கும், இந்துமத மறுமலர்ச்சிக்கும், இந்துக்களின் விழிச்சிக்கும், எழிச்சிக்கும் உயர்ச்சி முயற்சிக்கும், செழிச்சி பயிற்சிக்கும், ஆட்சி மீட்சிக்கும் பாடுபட, இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் புறப்பட்டிருக்கின்றது
இந்துக்களிடையே ஏற்படுத்தியுள்ளது விழிப்புணர்வை ஏற்படுத்தி , இந்துவேதம் கூறும் தனிமனித, குடும்ப, சமுதாய, அரசியல் வாழ்வுகளில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் அருளாட்சிப் பணியில் எங்கள் குருதேவரின் கருத்துக்களையும், எழுத்துக்களையும் வெளியிட்டு, செயல்படுத்தி சமய வழி மறுமலரச்சிக்காக இ.ம.இ. பாடுபட்டு வருகின்றது.
உங்கள் பதிவுகளில் Hastag பயன்படுத்துங்கள்: #தமிழர்_கோயில்_தமிழருக்கே
உடன் விடுப்பு அழைப்பு (Missed Call) தாருங்கள்: 8010027272